தமிழ் வர்த்தகரை கடத்தி கப்பம் கேட்டு செய்த கொடுமைகள்! முன்னாள் நீதியரசர் ஒருவரின் அட்டூழியங்கள்
இலங்கையில் நிலவிய போர் சூழ்நிலையின் போது, 2006 ஜூலை 20 அன்று கொழும்பு 7 கிரகரி வீதியில் தொழிலதிபர் நடராஜா ஸ்கந்தராஜா தனது இல்லத்திலிருந்து கடைக்கு வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, அவரும் இவருடைய சாரதியான ராமையா ஜெயராஜும் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டனர்.
இவரை விடுவிப்பதற்காகக் கடத்தல்காரர்களால் கேட்கப்பட்ட பெருந்தொகை பிணைப்பணம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட போதிலும், அவரோ அல்லது அவருடைய சாரதியோ அதன் பின்னர் விடுவிக்கப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் புலனாய்வு ஊடகவியலாளரும், இலங்கை விமானப்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியுமான கீர்த்தி ரத்நாயக்க திடுக்கிடும் மற்றும் அவருக்கு நடந்த பல கொடுமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
தொழிலதிபர் எவ்வாறு கடத்தப்பட்டார்
கொழும்பு 11, 4ஆம் குறுக்குத் தெருவில் அமைந்திருந்த 'கலா டிரேடர்ஸ்' (Kala Traders (Pvt) Ltd) என்ற நிறுவனத்தின் ஊடாகப் பெருமளவில் சீனி இறக்குமதி மற்றும் விநியோக வர்த்தகத்தில் ஈடுபட்டதால், இவர் பொதுவாக 'சீனி முதலாளி' என அழைக்கப்பட்டார்.
ரோஹண குமார என்று சொல்லப்படுபவர், முன்னாள் நீதியரசர் சரத் சந்த சில்வாவின் செயலாளராக இருந்தவர்.இவர்கள் தொழிலதிபரை கடத்தி கப்பத்தைப் பெறுகிறார்கள்.
பின்னர் அந்த நபரைக்கொலை செய்கிறார்கள். அதன்பிறகு அவரது மனைவியை மோசமான நடத்தைக்கு அழைக்கிறார்கள். அச்சந்தர்ப்பத்தில் நீதியரசர் சரத் என் சில்வாவும் சம்பந்தப்படுகிறார்.

அவரின் சுமார் 5000 கோடி சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.கடற்படை (Navy) கப்பக் கும்பலும், ரோஹண குமாரவும் இதை செய்கிறார்கள்.
இதில் பிக்கு ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளார்.இந்தப் பிக்குவின் விகாரை களனிப் பாலத்துக்கு பக்கத்தில்தான் இருக்கிறது. அந்த இடம் ஒரு துணை இராணுவ (Paramilitary) மையமாகத்தான் இயங்கியது.அந்த விகாரையில் இந்தக் கும்பல் கடத்தல் செயற்பாட்டை நடத்தியது.
தொழிலதிபரை கொலை செய்த பின்னர் நீதியரசர் சரத் நந்த சில்வா, அவர்களை ஒரு வரி வழக்கில் (Tax case) மாட்டிவிட்டு, அந்த வரி வழக்கிற்குத் தேவையான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கான பின்னணியை உருவாக்கி தொழிலதிபரின் மனைவியை மோசமான செயலுக்கு அழைத்துள்ளனர்.
அவையொல்லாம் நடந்தும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இன்று கோடிக்கணக்கான சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.92, விஜயராம வீதி, கொழும்பு 07 இல் உள்ள 'கலா டிரேடர்ஸ்' தலைமையகத்தை இன்று ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது சவேந்திர சில்வா. சவேந்திரவும் ரோஹண குமாரவும் உறவினர்கள் என்பதற்கான புகைப்படங்களை நான் வெளியிட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்: பல்பொருள் அங்காடியின் பதிலடி News Lankasri