வடமாகாண கருவாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு
வட மாகாணத்தின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் கருவாட்டு உற்பத்தியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் நாட்டில் உப்பின் விலை அதிகரிப்பு காரணமாக பாதிப்படைந்துள்ளதாக வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்ற நிலைமை காணப்படுகின்றது.
உப்பின் விலை
எனவே, தற்போதைய அரசாங்கம் இவ்விடத்தில் கவனம் செலுத்தி உப்பின் விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத தொழில்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
இவ்விடயத்தை அரசாங்கம் கவனம் செலுத்தி சட்டவிரோத தொழில்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்த வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
