பெரும் சிக்கலில் அநுர அரசு! அதிரடி காட்டப்போகும் சர்வதேச நீதிமன்றம்...
இலங்கை அரசியல் கடந்த ஆண்டு செப்டம்பரில் திசை மாறியது. இந்த மாற்றத்தால் இடதுசாரி கொள்கைகளை உடைய தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணியின் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்,
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அநுர சமமான பொருளாதாரக் கொள்கைகளை உறுதியளித்தார், மேலும் ஊழலை எதிர்த்துப் போராடுவது மற்றும் துஷ்பிரயோகம் செய்யும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பது உள்ளிட்ட சில நீண்டகால மனித உரிமைகள் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார் .
இருப்பினும், முந்தைய ஜனாதிபதிகளைப் போலவே, இலங்கையின் 1983-2009 உள்நாட்டுப் போரின் போது அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இடையே நடந்த பெரிய அளவிலான யுத்தத்தில் இடம்பெற்ற மனித எரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை அவர் ஆதரிக்கவில்லை.
இலங்கையில் மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து அறிக்கை அளிப்பதற்கும், நாட்டின் உள்நாட்டுப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் குற்றங்களுக்கான ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும், எதிர்கால தேசிய மற்றும் சர்வதேச வழக்குத் தொடர்பை ஆதரிப்பதற்கும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்தை ஒருவருடத்திற்கு நீடித்துள்ளது.
இவ்வாறான போக்கில் தற்போதைய அரசாங்கம் மனித உரிமை மீறலுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு எதிராக நகர்வுகளை வகுக்குமாயின் அது அநுர தரப்பை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவைக்கும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் (V. Uruthirakumaran) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர் பின்வரும் விடயங்களை சிறப்பு நேர்காணல் ஊடாக விளக்கியுள்ளார்...

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
