விடுதலைப்புலிகளின் தலைவரை நாடு கடத்தும் திட்டத்தை விரும்பாத ரஸ்யா..! அப்போது என்ன நடந்தது
தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஒரு அங்கமாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கும், தமிழீழ விடுதலைக்கழகத்தின் செயலதிபர் உமாமகேஸ்வரனுக்கும் இடையில் துப்பாக்கிசூட்டு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், தமிழீழ விடுதலைக்கழகத்தின் செயலதிபர் உமாமகேஸ்வரனுடன் ராகவனும் கைது செய்யப்பட்டு சென்னை கடற்கரை சாலையிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவரையும் இலங்கைக்கு அழைத்து வர ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்தது.
அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக அப்போதைய பொலிஸ்மா அதிபராக இருந்த தமிழரான உருத்திர இராஜசிங்கம் தலைமையிலான ஒரு குழு இந்தியாவிற்கு சென்றடைந்திருந்தது.
எனினும் இந்த பேச்சுவார்த்தைகளுக்கு இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசாங்கமும், எம்.ஜி.ஆர் தலைமையிலான மாநில அரசாங்கமும் உடன்படவில்லை.
இதற்கு பின்னணியில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் தந்திரம் இருக்குமோ என்ற அச்சநிலை தமிழர்களுக்கிடையில் இருந்தது. ஆனால் ரஸ்ய சார்புக்கொள்கையிலிருந்த இந்திராகாந்தி அமெரிக்கா சார்புக்கொள்கையிலிருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனவுடன் கடுமையாக முரண்பட்டார்.
அத்துடன் ஜெயவர்த்தனவுடனான தனது சதுரங்க ஆட்டத்தில் தமிழீழ விடுதலை போராட்டத்தை மையப்படுத்திய போராளிக்குழுக்களையும் முக்கிய துருப்பு சீட்டுக்களாக பயன்படுத்தினார்.
இந்த விடயத்தில் ரஸ்யாவின் தலையீடு எவ்வாறு அமைந்தது என்பது தொடர்பில் விரிவாக விளக்குகின்றது கீழ்வரும் காணொளி…..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri
