இங்கிலாந்தில் தீவிரமடைந்துள்ள வெப்ப அலை - லண்டன் வாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு
லண்டன்வாசிகள் BBQs மற்றும் தீயை தவிர்ப்பதை உறுதி செய்வதற்காக திறந்த வெளிகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக மெட் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் தீவிர வெப்ப அலையை தொடர்ந்து லண்டன் உள்ளிட்ட பல இடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பல குடியிருப்புகள், கட்டடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெருநகர காவல்துறை சற்று முன்னர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிக வெப்பநிலை லண்டன் முழுவதும் பல தீவித்துகளை ஏற்படுத்தியுள்ளது. வென்னிங்டனிலும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
?️ For the first time ever, 40 Celsius has provisionally been exceeded in the UK
— Met Office (@metoffice) July 19, 2022
London Heathrow reported a temperature of 40.2°C at 12:50 today
? Temperatures are still climbing in many places, so remember to stay #WeatherAware ⚠️#heatwave #heatwave2022 pic.twitter.com/GLxcR6gjZX
லண்டன் வாழ் மக்களுக்கு அறிவுரை
தற்போது வரை தீவிபத்து சமாளிக்கப்படுகிறது. தீயணைக்கும் வாகனங்கள் அவர்களுக்கு மிகவும் தேவைப்படும் இடங்களில் இருப்பதை உறுதி செய்வதற்காக, தீயணைக்கும் வீரர்களை சம்பவங்களுக்கு கொண்டு செல்வதற்கு வாகன ஆதரவை வழங்குகிறோம்.
மேலும் எங்களால் முடிந்த ஆதரவை வழங்க அவர்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம் என மெட் பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், LFB அறிவுரைகளை லண்டன்வாசிகள் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்வதற்காக வரும் மணிநேரங்களில் அதிகாரிகள் திறந்த வெளிகளில் ரோந்து செல்வார்கள்.
லண்டன் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள்
- இன்றிரவு பார்பிக்யூ அல்லது நெருப்பு வைக்க வேண்டாம்
- உடைந்த பாட்டில்கள் அல்லது கண்ணாடிகளை தரையில் விடாதீர்கள்
- சிகரெட்டைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துங்கள்.