நாடாளுமன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றில் இன்று விசாரணை

Law and Order Court of Appeal of Sri Lanka General Election 2024 Parliament Election 2024
By Rakesh Nov 04, 2024 04:29 AM GMT
Report

நாடாளுமன்றத் தேர்தல் (Parliament Election) எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறுமா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை இன்று (04) உயர்நீதிமன்றம் முன்னெடுக்கவுள்ளது.

அரசமைப்பில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்துக்கும் வாக்களிப்பு நடைபெற வேண்டிய தினத்துக்கும் இடையில் உள்ள காலம் பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் காலக் கணக்குக்கு ஒரு நாள் முன்னதாக தற்போது நாடாளுமன்றத் தேர்தல் திகதியிடப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, அடிப்படை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மனு மீதான விசாரணையே இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அரச சொத்துக்களை விரயம் செய்த முன்னாள் அமைச்சர் - அம்பலப்படுத்தும் அதிகாரி

அரச சொத்துக்களை விரயம் செய்த முன்னாள் அமைச்சர் - அம்பலப்படுத்தும் அதிகாரி

தீர்மானம் அரசமைப்புக்கு எதிரானது

இந்த விடயம் சம்பந்தமாக தேர்தல்கள் ஆணைக்குழு தனது அவதானிப்பு அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கடந்த வாரம் அனுப்பி வைத்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றில் இன்று விசாரணை | Hearing Today High Court Regard General Elections

இதனைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியதோடு, சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் தனது சமர்ப்பணத்தை இன்று செய்யவுள்ளார்.

முன்னதாக, எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசமைப்புக்கு எதிரானதென உத்தரவிடுமாறு கோரி சிவில் செயற்பாட்டாளரும் நாம் ஸ்ரீலங்கா தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளருமான எச்.எம்.பிரியந்த ஹேரத் கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதித் தினம்

இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட அதன் அங்கத்தவர்கள் உட்பட்டோர் பெயரிடப்பட்டனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு சட்டத்தின் 10 ஆவது விதந்துரைக்கமைய வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்காக ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11 ஆம் திகதிவரையான காலப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின்படி வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் முதல் ஐந்து வாரங்களுக்கு குறையாத, ஏழு வாரங்களுக்கு மேற்படாத காலப்பகுதிக்குள் தேர்தலுக்கான திகதி குறிப்பிடப்பட வேண்டும் என்று கேட்டிருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றில் இன்று விசாரணை | Hearing Today High Court Regard General Elections

அதன்படி, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதித் தினமான ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் ஐந்து வார காலம் நவம்பர் 15ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அதேபோல் ஒக்டோபர் 11 முதல் ஏழு வார காலம் நவம்பர் 29ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நவம்பர் 14ஆம் திகதி அந்த சட்ட எல்லைக்குள் இல்லை என்று மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரை அறிவுறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலனற்றுப் போனதால், மக்களின் இறைமையும் நாட்டின் அரசமைப்பும் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டமைக்கு எதிரான உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றில் மேலும் கோரியிருந்தார்.

குறிப்பிட்ட கால அவகாசம்

இவ்வாறான நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை வாக்களிப்பைத் தீர்மானிப்பதற்குப் பதிலாக வழமை போன்று சனிக்கிழமையன்று 16ஆம் திகதிக்கு அதனை நடத்த ஒழுங்குபடுத்தி இருந்தால் அது அரசமைப்பு குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்குவதாக இருந்திருக்கும் எனவும் அந்த மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றில் இன்று விசாரணை | Hearing Today High Court Regard General Elections

நவம்பர் 15ஆம் திகதி பௌர்ணமி தினம் என்பதால் அரச விடுமுறை நாளாகும். ஆகையால் அடுத்த நாள் 16ஆம் திகதி தேர்தலை நடத்த இணக்கம் வரலாம் என்று உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக இணக்கம் ஏற்பட்டால் இரண்டு நாட்கள் தேர்தல் பிற்போடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

ரணிலுக்கு பதிலடி கொடுத்த தேசிய மக்கள் சக்தி

ரணிலுக்கு பதிலடி கொடுத்த தேசிய மக்கள் சக்தி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US