கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் கடுமையான களப்பணியில் சுகாதார தரப்பினர்
இலங்கையில் மிக வேகமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோவிட் அலையின் தாக்கம் கிழக்கிலும் தினந்தோறும் அதிகரித்து வரும் அச்சநிலை உள்ளதனால் மக்களை வழிப்படுத்தி கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் சுகாதார தரப்பினர் கடுமையான களப்பணியை நாடு பூராகவும் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட்டின் நெறிப்படுத்தலில் பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம்.பைசல் முஸ்தபா தலைமையில் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பயிலுநர்களும் கலந்து கொண்டு பிந்திய இரவுகளிலும் களப்பணியாற்றி வருகின்றார்கள்.
கோவிட் -19 பரவலை சாய்ந்தமருது பிரதேசத்தில் கட்டுப்படுத்தும் முகமாக சாய்ந்தமருதில் இன்று உள்ளூர் மற்றும் பிரதான வீதிகளில் இந்த குழுவினரினால் கள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் வாகனங்கள் அத்தியாவசிய தேவைக்கான அனுமதிப்பத்திரம் உள்ளனவா என்றும் பரிசீலிக்கப்பட்டதுடன், மருந்தாக உரிமையாளர்களுக்கும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றவேண்டிய அவசியத்தை இதன்போது வலியுறுத்தினார்.
மேலும் பாதுகாப்பு படையினர்கள், பொலிஸார் இணைந்து பிரதேச வீதிகளில் ரோந்து
நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
