சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு(Photos)
சம்பள பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நாடாளாவிய ரீதியில் தாதியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற் சங்கங்களைச் சேர்ந்தோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துக் கடந்த திங்கள் கிழமை முதல் பணிபுறக்கணிப்பு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (10.02) குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இதில் சுகாதார சேவையைச் சேர்ந்த 16 தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ' சம்பளப் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு வேண்டும், சுகாதார நிர்வாக சேவையை நிறுவுக, உரிய காலப்பகுதியில் பதவி உயர்வு வழங்கு, சம்பள முரண்பாட்டினை நீக்கு, மருந்துகளின் விலைகளை உடனடியாக குறை' உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை முன் வைத்து கோசங்களை எழுப்பியதுடன், சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.
அத்துடன், தமது கோரிக்கைக்குச் சுகாதார அமைச்சு சாதகமான பதிலை வழங்காதுவிடின்
தமது போராட்டம் தொடரும் எனவும் இதன்போது அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.




பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam