கிளிநொச்சி வேரவில் வைத்தியசாலைக்கு நோயாளர் காவுவண்டி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கை
கிளிநொச்சி - வேரவில் வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி தொடர்பில் வேரவில் பிரதேச மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திலிப் லியனகே வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
மக்கள் முறைப்பாடு
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அவர் முன்னறிவித்தலின்றி கடந்த புதன்கிழமை வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
வேரவில் வைத்தியசாலைக்கு செல்லும் வீதிகளின் மோசமான நிலையினால் இந்த வைத்தியசாலைக்கு லான்குரூசர் ரக வாகனமே நோயாளர் காவு வண்டியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றதாக மக்கள் முறைப்பாடொன்றை முன்வைத்திருந்தனர்.
இந்த வண்டி கடந்த பல நாட்களாகப் பழுதடைந்தும் இதுவரை திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் அவசர நோய் நிலைமைகளில் வேரவில் வைத்தியசாலையிலிருந்து பிற வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களைக் கொண்டு செல்ல முடியாத நிலை காணப்பட்டுவதாக முறைப்பாடு செய்துள்ளனர்.
வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட லான்குரூசர்வாகனம்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திலிப் லியனகே வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக லான்குரூசர் வாகனம் ஒன்று பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் உடனடியாகவே வேரவில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பழுதடைந்த லான்குரூசர் வாகனத்தினை விரைந்து பழுதுபார்ப்பதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வேரவில் வைத்தியசாலையைத் தரம் உயர்த்துவதாகவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
சுற்றொழுங்கு முறை
அதுவரையில் தற்காலிக ஏற்பாடாக பிற வைத்தியசாலைகளில் இருந்து சுற்றொழுங்கு முறையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் வேரவிலில் வைத்தியசாலைக்கு சென்று சேவையாற்றுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் முழங்காவில் ஆதார வைத்தியசாலை, பூநகரி
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பூநகரி வைத்தியசாலை
ஆகியவற்றிற்கும் நேரடியாகச் சென்று கள நிலமைகளை ஆராய்ந்தார் என தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam
