மன்னார் - பேசாலை உணவகத்தில் பூரானுடன் உணவு! எடுக்கப்பட்ட நடவடிக்கை
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பேசாலை கிராமத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று (07.04.2023) காலை கொள்வனவு செய்யப்பட்ட உணவில் பூரான் காணப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் சுகாதார துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
முறைப்பாடு தொடர்பில் விரைந்து செயல்பட்ட மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள் சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக உணவகத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனை
இதனையடுத்து உணவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டதுடன் கடை உரிமையாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த சமையலறையை உடனடியாக திருத்தி அமைப்பதற்குரிய வழிகாட்டலும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.