மயானத்தில் நடத்தப்படும் நெஞ்சை நெகிழ வைக்கும் பேச்சுவார்த்தையே இது..! பிமல் உருக்கம்
ஒரு மயானத்தில் நடத்தப்படும் நெஞ்சை நெகிழ வைக்கும் பேச்சுவார்த்தையாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இந்த நிகழ்வை நான் காண்கிறேன் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, இலங்கை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மேற்கொண்ட முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று(29) அலரி மாளிகை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தடுக்க முடியாத கடனாளியாக
தொடர்ந்து பேசி அவர், ஒரு கடனை செலுத்த வேண்டிய நபராகவும், இவ்வாறான சந்தர்ப்பத்தை தடுக்க முடியாத கடனாளியாக இந்த நிகழ்வில் பங்கேற்கிறேன்.
இது ஒரு நிகழ்ச்சி அல்ல,மிகவும் விசித்திரமான சந்தர்ப்பம். நீதியை நிலைநாட்டும் முயற்சியாகும். இராணுவத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில், மக்கள் விடுதலை முன்னணியில் மற்றும் தனிப்பட்ட ரீதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளனர்.
தவறுகளைத் தடுக்க முடியாத கோபம் கொண்ட நபர்களாக, நமக்கு ஒரு பொறுப்பு இருக்க வேண்டும். ஒரு அரசாங்கமாக, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நாங்கள் ஆதரிக்கிறோம்.
சூரியகந்தவிலிருந்து மாத்தளை வரை
எமது நாட்டில் அடைக்க முடியாத ஓட்டையை விட்டுச் செல்லும் இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். பொறுப்புடனும் செயல்படுகிறோம் பொருளாதார, அரசியல், சமூக உறவுகளில் ஏற்பட்ட விரிசல்கள் பாகுபாடுகள் அதற்கான காரணமாகலாம்.
தண்டிப்பதன் மூலம் அவற்றைத் தீர்க்க முடியாது. சூரியகந்தவிலிருந்து மாத்தளை வரை, பெரிய அளவிலான மோசடிகள் நடந்துள்ளன.அங்கேயும் மனித புதைகுழிகள் காணப்படுகின்றன.
இவற்றுக்காக உண்மை ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டு உண்மைகள் வெளிகொண்டு வரப்படும். இதை அரசியல் பிரசாரமாக நாங்கள் செய்யவில்லை. செப்டெம்பர் நெருங்கி வரும் போது, இவர்களை வைத்து பல நாடகங்கள் நடத்தப்படும். இவற்றை மக்கள் எதிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



