திருகோணமலையிலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாகச் சென்ற இளம் கர்ப்பவதி உயிரிழப்பு
திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமாநகர் கிராமத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாகச் சென்ற 19 வயதுடைய இளம் கர்ப்பவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த துர்ப்பாக்கிய சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
வீரமாநகர் கிராமத்திலிருந்து கதிர்காமத்திற்கு செல்லும் இடைநடுப்பகுதியில் சீரான வைத்திய சேவையின்மையால் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த தாய் அதிகளவான குருதிப் பெருக்கின் காரணமாக ஆபத்தான நிலையில் இராணுவத்தினரால் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எரிபொருள் பிரச்சினை
சுகாதார திணைக்களத்தின் நடைமுறைகளின் பிரகாரம் கர்ப்பவதிகள் இவ்வாறான பாத யாத்திரைகளில் கலந்து கொள்ளாமல் இருக்க அந்த பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்களினால் ஆலோசனை வழங்கப்பட்டு கண்காணிக்கப்படுவர்.
இதனால் கர்ப்பவதிகளுக்கான நிறைவான சிகிச்சைகளோ, ஆலோசனைகளோ வழங்கப்படுவதில்லை.
இதன் காரணமாகவே கர்ப்பிணித்தாய் இந்த ஆபத்தான நிலைக்குச் சென்றுள்ளார் என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



