பண்டிகை காலத்தை முன்னிட்டு யாழ். நகர வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை!
பண்டிகை காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இன்றையதினம் (24.12.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் 28 உணவகங்கள் மற்றும் இதர வர்த்தக நிலையங்கள் உள்ளடங்கலாக பல வர்த்தக நிலையங்களில் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அழிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்
குறித்த நடவடிக்கையில், 11 கடைகளில் குறைபாடுகள் இருப்பது அவதானிக்கப்பட்டதோடு, அங்கு வியாபாரத்துக்காக வைக்கப்பட்டிருந்த 9 வகையான உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் நான்கு கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்பின் பேரில், சுகாதார வைத்திய அதிகாரி, தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி, தாய்சேய் நல வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இந்த களத்தரிசிப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 7 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
