மிக மோசமான நிலையை சந்திக்கப் போகும் இலங்கை! வெளியான அபாய எச்சரிக்கை
நாட்டில் மருந்தக வரிசை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளுக்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான வரிசைகள் உருவாகும் அபாயம் இருப்பதாக சுகாதார தொழிற்சங்கவாதி ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையை எதிர்க்கும் மோசமான நிலையை நாடு சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான கடன் பத்திரங்களை திறக்க முடியாததால், எதிர்காலத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
60 மருந்துகளின் பற்றாக்குறை தொடர்பில் அவர் வெளிப்படுத்தியதுடன் , மருந்து விலை 28 சதவிகிதம் அதிகரித்தது ஒரு ஆரம்பம் என்றும், எதிர்காலத்தில் ஏகபோகம் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மருந்துகள் கிடைப்பதன் அடிப்படையில் சிகிச்சை முறைகளை முடிவு செய்ய மருத்துவர்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள். இனி இந்தியக் கடன் திட்டத்தின் மூலம் மருந்துகள் இறக்குமதி செய்யப்படும். மருந்துத் தேவையில் 20 சதவீதத்தை மாத்திரமே இதன் மூலம் பூர்த்தி செய்ய முடியும்.
80% அத்தியாவசிய விசேட மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும், அரச மருத்துவமனைகளில் அத்தகைய மருந்துகள் தீர்ந்துவிடும் என்றும், நோயாளிகள் மருந்தகங்களில் இருந்து அவற்றைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், இதனால் அதிக வரிசைகள் உருவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
