நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதியுடன் தேரர்கள் விசேட கலந்துரையாடல்
கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
நேற்று(10.03.2026) கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
விசேட சந்திப்பு
இதன்போது, ஜனாதிபதியுடன் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்ட மகாநாயக்க தேரர், நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் அரசின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

புதிய அரசின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கும், நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காகவும் ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர் தனது நல்லாசிகளையும் வழங்கியுள்ளார்.
இந்த விசேட சந்திப்பில், பன்னிப்பிட்டிய ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாரையின் விகாராதிபதியுமான மகாநாயக்க தேரருடன், கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் சிரேஷ்ட கர்மவாகாச்சார்ய மாபலகம புத்தசிறி தேரரும் கலந்துகொண்டுள்ளனர்.

1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri