நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளான வாகனங்கள்: பரிதாபமாக உயிரிழந்த யுவதி
காலி, நெலுவை பிரதேசத்தில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி நேர்ந்த கோர விபத்தில் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (03.01.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
ஹயஸ் வான் ஒன்றும், கார் ஒன்றும் மோதிய நிலையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது காரைச் செலுத்திச் சென்ற 26 வயது யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் விசாரணை
தனியார் வங்கியொன்றில் பணியாற்றும் மேற்படி யுவதி, வேலை முடிந்து வீடு திரும்பும் வழியிலேயே விபத்தில் சிக்கியுள்ளார்.

ஹயஸ் வானின் சாரதி காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இரண்டு வாகனங்களிலும் சாரதிகளைத் தவிர வேறு எவரும் பயணிக்கவில்லை என்று தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 14 மணி நேரம் முன்
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam