இஸ்ரேலிய தாக்குதலின் எதிரொலி: பாதிப்புக்குள்ளாகியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர்
ஏமனில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் சிக்கிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்,(Tedros Adhanom Ghebreyesus) டின்னிடஸ்(அதிர்வு சத்தம்) தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏமன் தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
"எனது உடல் நிலை நன்றாக உள்ளது. ஆனால் அந்த வெடிப்பு சத்தம் என்னை டின்னிடஸ் [என் காதுகளில் தொடர்ந்தும் ஒலிக்கிறது] தாக்கத்துக்குள் கொண்டு சென்றுள்ளது.
விமான நிலைய தாக்குதல்
இது தற்காலிகமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என கூறியுள்ளார்.
கடந்த வாரம் வியாழன் அன்று(25.12.2024) ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையத்தின் மீது இஸ்ரேலின் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இது உலக சுகாதார அமைப்பின் தலைவரின் ஏமன் விஜயத்தின் போது இடம்பெற்றிருந்தது.
இஸ்ரேலின் தாக்குதல்
இது தொடர்பில், டெட்ரோஸின் கூற்றுப்படி, அவரது குழு உறுப்பினர்களில் ஒருவர் காயமடைந்ததாகவும், இஸ்ரேலின் தாக்குதலின் போது கட்டுப்பாட்டு கோபுரம், புறப்படும் மண்டபம் மற்றும் ஓடுபாதை ஆகியவை சேதமடைந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில்,சர்வதேச விமான நிலையத்தின் இலக்குகள் உட்பட ஏமனில் உள்ள ஹவுதி போராளிகளின் உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
I am grateful to be in Geneva, spending time with my family and celebrating the New Year after the @UN mission to negotiate the release of our colleagues and the bombardment at Sana’a Airport by Israel as we attempted to leave #Yemen. I am okay, but I have developed tinnitus… pic.twitter.com/R62sXiz4FQ
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) December 31, 2024
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |