இந்தியாவில் அரசியல் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ஹமாஸ் அமைப்பின் தலைவர்
இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 7ஆம் திகதி நடந்த தாக்குதலுக்கு காரணமான ஹமாஸ் அமைப்பின் குழுவின் தலைவர் ஒருவர், கேரளாவின் மலப்புரத்தில் ஒருமைப்பாட்டு இளைஞர் இயக்கம் ஏற்பாடு செய்த மெய்நிகர் பேரணியில் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெய்நிகர் பேரணியை ஏற்பாடு செய்த ஒருமைப்பாட்டு இளைஞர் இயக்கம், மலப்புரத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்தின் இளைஞர் பிரிவுடன் தொடர்பை கொண்ட அமைப்பாகும்.
எழுந்துள்ள கண்டனம்
ஹமாஸ் தலைவர் கலீத் மாஸல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் உரையாற்றும் காணொளி ஒன்று காட்டப்பட்டுள்ளது.
பேரணியில் மாஸலின் மெய்நிகர் உரையை பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே சுரேந்திரன் கண்டித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கேரள பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கேரளாவின் மற்றுமொரு இடத்தில் இன்று (28.10.2023) இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்து பேரணி ஒன்றை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
