வாகன விபத்தில் வயோதிபர் மரணம்!
ஹயஸ் வான் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து மஹவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அநுராதபுரம் - பாதெனிய வீதியில் நேற்று(1)இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரத்தில் இருந்து பாதெனிய நோக்கிச் சென்ற ஹயஸ் வான், வீதியைக் கடக்கும் பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
உயிரிழப்பு
இந்த விபத்தில் பாதசாரி பலத்த காயமடைந்து அம்பன்பொல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய வயோதிபர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
சடலம் அம்பன்பொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துடன் தொடர்புடைய ஹயஸ் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹவ பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



