ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வாகன விபத்து
ஹட்டன் - கொழும்பு(Hatton - Coombo) பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று (12.11.2024) இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன், வான் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
வானின் சாரதி
விபத்தில் வானின் சாரதி படுகாயமடைந்து வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கினிகத்தேனயிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த குறித்த வான் வண்டியானது முன்னால் சென்ற முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முட்பட்டதாகவும், இதன்போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பேருந்துடன் மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உலகின் எதிர்காலமே இதுதானாம்! தங்கத்தை விட முக்கியம்..நாடொன்றில் கொட்டிக்கிடக்கும் புதையல் News Lankasri

அமெரிக்காவின் வரி விதிப்பு... முதல் முறையாக ட்ரம்புக்கு எதிராக கருத்து தெரிவித்த எலோன் மஸ்க் News Lankasri
