கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்ட சுழியோடிகள்! பல மணிநேரத்தின் பின்னர் மாணவனின் சடலம் மீட்பு
புதிய இணைப்பு
கெசல்கமு ஓயாவில் நீராடச்சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி (04) காணாமல்போயிருந்த நிலையில் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் இன்று (05) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார ராஜநாயக்க தெரிவித்தார்.
நண்பர்களுடன் (04) பிற்பகல் இணைந்து நோர்வூட் கெசல்கமு ஓயாவின் நீராடிக் கொண்டிருந்த போதே தவறி விழுந்து காணாமல் போயிருந்தார்.
பிரேத பரிசோதனை
இதன்படி கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படையின் ரங்கல முகாம் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் இன்று (05) ஞாயிற்றுக்கிழமை தேடிய நிலையில் பிற்பகல் சடலம் 1 மணியளவில் சடலமாக மீட்டனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் ஏந்திச்செல்லும் கெசல்கமு ஓயாவில் நீராடச்சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோர்வூட் தோட்டத்தைச் சேர்ந்த நோர்வூட் அயர்வி தமிழ் மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
தேடுதல் பணிகள்
நேற்று (04) பிற்பகல் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து நோர்வூட் கெசல்கமு ஓயாவின் நீராடிக் கொண்டிருந்த போதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவன் நீரில் மூழ்கியதைக் கண்ட அவரது நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்துள்ளனர். எனினும், அந்தப் பகுதி அதிக ஆழம் கொண்டதாக இருந்தமையால் அவர்களால் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
இது குறித்து நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், காணாமல்போன மாணவனை தேடும் விசேட தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
போர்க்களத்தில் களமிறக்கப்படும் அதி சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு! ஈரானின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்













தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam