லாப்ஸ் எரிவாயு விலை 1070 ரூபாவினால் உயர்வு
உலக சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு, லாப்ஸ் எரிவாய நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் வீட்டு பயன்பாட்டு எல்.பி. (LPG) எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை திருத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,070 ரூபா அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 5,700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 கிலோ சிலிண்டரின் விலை 418 ரூபாவாக உயர்ந்து புதிய விலை 2,280 ரூபாவாக உயர்ந்துள்ளது.

உள்நாட்டு செலவுகளை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்த விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆதேவேளை, உலக சந்தை மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சந்தையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டால் அதன் நன்மைகளை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லாப்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri