தொடர் கனமழையால் அவதிப்படும் மலையக மக்கள்..! பாதைகளை சீரமைத்து தருமாறு கோரிக்கை
ஹட்டன் - டிக்கோயா பிரதான பாதையை இணைக்கும் எபோட்ஸிலி தோட்டத்திற்கு செல்லும் பாதை, தொடர் மழைக்காரணமாகவும், வெள்ளம் காரணமாகவும், முற்றாக சேதடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன்- எபோட்ஸிலி பிரதான வீதியில் அமைந்துள்ள, பன்மூர் பகுதியின் சுமார் 300 மீட்டர் தூரம் அளவிலான பாதையே இவ்வாறு கடுமையாக சேதமடைந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள வாகன சாரதிகள் அவதிப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் கோரிக்கை
தற்போது நிலவும் மழைக்கால சூழ்நிலையால் வீதியின் பல இடங்களில் பாரிய குழிகள் உருவாகியுள்ளதுடன், கால்வாய்களில் வழிந்தோடும் மழைநீர் நேரடியாக வீதியூடாகப் பாய்ந்து செல்லும் நிலையும் காணப்படுகின்றது. இதனால் வீதி சேறும் சகதியுமாக மாறி, கால்வாய்கள் போல் கட்சியளிக்கின்றது.

இதில், பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
எனவே, இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கூடிய கவனம் செலுத்தி, சேதமடைந்த வீதியை சீரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செம்மணி பயங்கரம் தொடர்பில் பரிசுத்த பாப்பரசருக்குச் சென்ற இரகசிய கடிதம்! நடமாடும் காலத்தின் சாட்சியம்..