செம்மணி பயங்கரம் தொடர்பில் பரிசுத்த பாப்பரசருக்குச் சென்ற இரகசிய கடிதம்! நடமாடும் காலத்தின் சாட்சியம்..
சர்வதேச நீதியை எதிர்பார்க்கும் ஈழத் தமிழினம் ஒற்றுமையாக இணைந்து செயற்படுகின்ற போதே இழைக்கப்பட்ட குற்றங்களுககு நீதி கிடைக்கும் என்று செம்மணி தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை இடம்பெற்ற இன அழிப்பு செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்ட யாழ். சென் பற்றிக் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் அருட்தந்தை பேர்னாட் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி மனித பேரவலம் இடம்பெற்ற காலப்பகுதி மிக பயங்கரமானது என தெரிவித்த அருட்தந்தை பேர்னாட், அப்போது பரிசுத்த பாப்பரசருக்கு, செம்மணி பேரவலத்தை தடுத்து நிறுத்துமாறு கோரி அனுப்பி கடிதத்தையும் இதன்போது நினைவுகூர்ந்தார்.
மேலும், அந்தக் கொடூர காலத்தை கண்முன்னே கண்ட காலத்தின் சாட்சியமாய், அவர் பல வாக்குமூலங்களை இதன்போது வழங்கியுள்ளார்.
அவருடைய முழுமையான சாட்சியங்களைக் காண..👇
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam