FBI - CIA அதிகாரிகள் முடிவு - NVIDIA CEO ஜென்சனை காப்பாற்ற களத்தில் குதித்தாரா ட்ரம்ப்..!
அமெரிக்காவின் 3,700 வான்பரப்புகள் மூடப்பட்டுள்ள நிலையில், NVIDIA நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் (Jensen Huang), சீன உளவுத்துறையுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த சர்ச்சையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.
இந்த விடயங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை என்றும், ட்ரம்ப்பின் திட்டம் இதுவே என்றும் கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் (Nehru Gunaratnam) தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
FBI விசாரணை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனாவுக்குத் தகவல்களை வழங்கியதாக அமெரிக்க உளவுத்துறை சந்தேகிக்கும் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் ஜென்சன் ஹுவாங் தொடர்பில் இருந்ததாக செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பில் FBI விசாரணை நடத்தி வரும் நிலையில், NVIDIA நிறுவனத்தின் நிர்வாகக் குழுவும் தனியான விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜென்சன் ஹுவாங் ஒரு நேர்மையானவர் என்றும், அவரை நம்புவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாகப் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சில மணிநேரங்களில், நவம்பர் 12ஆம் திகதி ஜென்சன் ஹுவாங் NVIDIA நிறுவனத்தின் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.
ட்ரம்ப், அவரைத் தனது பதவிக்காகப் போராடுமாறு தொலைபேசியில் கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளதுடன், இன்று 3,700 வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்: வெளிப்படையாக எதிர்ப்பு துவங்கியது News Lankasri
மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம்... பிரித்தானியா முழுவதிலும் மருத்துவமனைகள், பாடசாலைகள் பாதிப்பு News Lankasri