ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா
ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் 108 அடி சப்த தள இராஜகோபுர மகா கும்பாபிஷேக பெருவிழா இன்றைய தினம் (25.03.2024) இடம்பெற்றுள்ளது.
108 அடி இராஜகோபுரம்
மத்திய மாகாணத்திலுள்ள முதல் சப்ததள 108 அடி பிரமாண்ட இராஜகோபுரத்தையுடைய பிள்ளையார் ஆலயமான இங்கு ஐந்தாவது கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மேலும் இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்
செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி
அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர் எம்.ராமேஷ்வரன் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |