ஹட்டனில் பரபரப்பை ஏற்படுத்திய வயோதிப தம்பதியினரின் கொலை.! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஹட்டன் டிக்கோயா நகரில் கணவன், மனைவியை கொலை செய்துவிட்டு, பெண் அணிந்திருந்த 18 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர் ஜூன் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரை இன்று (24) ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான பீற்றர் போல் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பிக்குவின் தொலைபேசியில் அம்பலமான பல தகவல்கள்..! கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள் - வெடிக்கும் புதிய சர்ச்சை..
நீதிமன்றின் உத்தரவு
விசாரணைகளின் பின்னர் பின்னர் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
47 வயதுடைய சந்தேகநபர் ஹாலிஎல, தெமோதரை பகுதியைச் சேர்ந்தஒரு குழந்தையின் தந்தையான 'செல்லையா மனோஜ்' என்பவராவார்.

குறித்த சந்தேகநபர் கைது கடந்த (21) ஆம் திகதி இந்தக் கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்று பொகவந்தலாவை பெட்ரோஸோ தோட்டத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில், (23) ஆம் திகதி ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி, கூரிய ஆயுதம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து தங்க நகைகளும் ஹட்டன் பொலிஸாரால் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வு வட்டாரத்தில் இரகசிய குறியீட்டில் அழைக்கப்பட்ட கோட்டாபய மற்றும் பிள்ளையான்: அம்பலமான தகவல்கள்

3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri