முல்லைத்தீவு விவசாய பண்ணையில் அறுவடை ஆரம்பம்
முல்லைத்தீவு - தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பண்ணையில் இம்முறை பெரும் போகத்தின் அறுவடை விழா ஆரம்பமாகியுள்ளது.
இந்த அறுவடை நிகழ்வானது இன்று (30.01.2024) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அறுவடை விழா
முல்லைத்தீவு - தேராவில் பகுதியில் சுமார் 120 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மாதிரி விவசாய பண்ணையில் பல்வேறு பயிர்செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் விவசாய பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையிலே இம்முறை பெரும் போகத்தின் போது 12 ஏக்கர் நிலப்பரப்பில் உளுந்து, பயறு மற்றும் கௌபி போன்ற சிறுதானியங்களும் 10 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் நற்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறுவடை நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர், முல்லை தீவு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர் பாசன பொறியியலாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாகாண விவசாயத் திணைக்களத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |