மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நாடளாவிய ரீதியில் நிர்வாக முடக்கல்..! அனைவருக்கும் அழைப்பு
மின்கட்டண அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் 74 இலட்சம் மின்பாவனையாளர்களும் ஒன்றிணைய வேண்டும் என துறைமுகம், பெட்ரோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் நிர்வாக முடக்கல் நடவடிக்கையில் ஈடுபட அவதானம் செலுத்தியுள்ளோம், மின்கட்டண அதிகரிப்பு நாட்டு மக்களுக்கு மரண தாக்குதலாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்கட்டண திருத்தம்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மின்சார சபை தனது நீண்ட கால நட்டத்தை ஈடுசெய்வதற்காக இவ்வருடத்தில் மேலதிகமாக 288 பில்லியன் ரூபாவை திரட்டிக் கொள்ள உத்தேசித்துள்ளது.
கடந்த ஐந்து மாத காலத்துக்குள் இருமுறை மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 65 சதவீதத்தால் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் உணர்வுபூர்வமாகச் செயற்படுவதில்லை. தன்னிச்சையாகச் செயற்படும் அரசுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.
நாடளாவிய ரீதியில் நிர்வாக முடக்கல்
தொழிற்சங்கங்களால் மாத்திரம் தனித்துச் செயற்பட முடியாது. மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து துறைமுகம், பெட்ரோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளை ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் நிர்வாக முடக்கல் நடவடிக்கையில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம்.
தொழிற்சங்கப் போராட்டத்துக்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
