IMF வழங்கியுள்ள ஒப்புதல்! கடன் மறுசீரமைப்பு கடினமாக இருக்கும் - ஹர்ச டி சில்வாவின் தகவல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வேலையைச் செய்ததன் பின்னர் தான் நிம்மதி அடைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிதி ஒப்புதலை அடுத்து அவர் இந்த விடயத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் மேலும், அரசியல் வேறுபாடுகள் இருந்த போதிலும் இந்த பணியை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.
வங்குரோத்து நிலைக்கு சென்ற நாடு
அரசாங்க மற்றும் மத்திய வங்கியின் செயல்பாட்டில் உள்ள நிபுணத்துவம் பாராட்டப்பட வேண்டும். கடந்த 2020ஆம் ஆண்டு இதனை முன்னைய அரசாங்கம் செய்திருந்தால் மக்கள் இந்தளவு துன்பப்பட்டிருக்க மாட்டார்கள்.
அப்போது மிகவும் குறைவான வலியுடன் இலங்கை மக்கள் வெளியே வந்திருக்கலாம். எனினும் அவர்களின் ஆணவமும், பேராசையும் இறுதியாக நாட்டை வங்குரோத்துக்கு கொண்டு சென்றது.
கடன் மறுசீரமைப்பு கடினமாக இருக்கும். சீர்திருத்தம் முக்கியமானது. எனவே சுவர்களை உடைத்து உலகிற்கு பாலங்களை அமைப்பதே நிலையான தீர்வாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
2/2: …our people would not have suffered this way. We could have come out w much less pain. Their arrogance n greed finally bankrupted us. Let’s look forward. Debt restructuring will be hard. Reform is key. Sustainable solution is to break down walls n build bridges to the world
— Harsha de Silva (@HarshadeSilvaMP) March 20, 2023
மேலதிக தகவல் - சிவா மயூரி