நாடாளுமன்றத்தின் முக்கிய பதவிக்கு ஹர்ஷ டி சில்வாவின் பெயரை முன்மொழியத் தீர்மானம்
10 ஆவது நாடாளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் பெயரை முன்மொழிவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு (Colombo)- பிளவர் வீதியில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் இரண்டு முறை நிதிக் குழுத் தலைவராக இருந்த ஹர்ஷ டி சில்வாவை (Harsha de Silva) அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு புதிய ஜனநாயக முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுத் தலைவர்
இதற்கான பிரேரணை இன்று(3) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை, நேற்றைய கலந்துரையாடலில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அநுராத ஜயரத்னவை புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
