சேவை ஏற்றுமதிகள் மீதான வரியை விமர்சிக்கும் ஹர்ஷ
சேவை ஏற்றுமதிகள் மீதான அரசாங்கத்தின் அண்மைய 15 சதவீத வரிவிதிப்பு முறையை மறுபரிசீலனை செய்யக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் ஹர்ஷ டி சில்வாவும் இணைந்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியின் போது அந்நியச் செலாவணியை ஈட்டும் தொலைதூர வேலைவாய்ப்புக்களே நாட்டில் மூளை வெளியேற்றத்தை தடுத்தன.
இலங்கையர்கள், இலங்கையிலேயே தங்கியிருந்து போட்டித்தன்மை வாய்ந்த சம்பளத்தைப் பெற அனுமதித்தன என்றும் அவர் கூறியுள்ளார்.
முரண்பாடான சமிக்ஞைகள்
இந்தநிலையில், கட்டுப்படுத்தப்பட்ட வரிக்கொள்கைகளை அறிமுகப்படுத்தும் அதேவேளையில், டிஜிட்டல் புகலிடமாக இலங்கையை சந்தைப்படுத்த முயற்சிப்பது முரண்பாடாக உள்ளது என்று டி சில்வா கூறியுள்ளார்.
நாங்கள் ஸ்ரீலங்காவை வெளிநாட்டு டிஜிட்டல் புகலிடமாக சந்தைப்படுத்துகிறோம், அதே நேரத்தில் அதே வேலைகளுக்காக, சொந்த குடிமக்களுக்கு வரி விதிக்கிறோம்.
இது முதலீட்டாளர்களுக்கு முரண்பாடான சமிக்ஞைகளை அனுப்புகிறது மற்றும் நமது போட்டித்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார் .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri

தப்பிக்க நினைத்து முத்துவின் கண்ணில் பட்ட ரோஹினி மாமா, இனி நடக்கப்போவது என்ன?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
