இரண்டாவது நாளாக தொடரும் விமலின் ஹரிணி கோ கம சத்தியாகிரக போராட்டம்
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
கல்வி அமைச்சிற்கு முன்பாக இந்தப் போராட்டம் நேற்றையதினம்(12) காலை ஆரம்பமாகியது.
இந்த போராட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என்று இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri