பிரித்தானியாவில் வாழும் இலங்கையர்களுடன் பிரதமர் ஹரிணி சிநேகபூர்வ கலந்துரையாடல்
பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரித்தானியாவில் வாழும் இலங்கையர்களை சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ லண்டன் விஜயத்தின் போது இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்துள்ளதாக குறிப்பிட்டார்.
பொருளாதார ஸ்திரம்
இலங்கையின் அரசியல் கலாசாரம் மீள முடியாத மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சரோஜா போல் ராஜ் பேசுகையில் நாட்டில் அனைத்து இன மக்களும் சமமாக நடத்தப்படும், பொருளாதார வளர்ச்சியின் பலன்களை ஒவ்வொரு குடிமகனும் சமமாக அனுபவிக்கும் அரசு கட்டமைக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பிரதாய அரசியல் ஒன்றுகூடல் முறைக்கு புறம்பாக இடம்பெற்ற இச்சந்திப்பில், கலந்துகொண்ட இலங்கையர்களுக்கு பிரதமர் மற்றும் அமைச்சரிடம் நேரடியாக கேள்விகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இரவு உணவு உட்பட நிகழ்வின் அனைத்து செலவுகளையும் பங்கேற்பாளர்களே ஏற்றுக்கொண்டதாக தெரிவித்த ஏற்பாட்டுக் குழு, பொது நிதியைப் பயன்படுத்தாமல் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீரவும் கலந்துகொண்டார்.
டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள தாக்கம்! வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்