சுவிட்சர்லாந்தில் இலங்கை பெண்கள் தொடர்பில் பிரதமர் நெகிழ்ச்சியான உரை
பாலின வேறுபாடுகளுக்கு அப்பால் பெண்களுக்கு பணியாற்றும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என சுவிட்சர்லாந்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டெவோஸ் – குளோஸ்டர்ஸ் நகரில் (19) முதல் 23ஆம் திகதி வரை நடைபெறும் 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டின் பெண்களுக்கான அமர்வில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்துரையாற்றிய அவர்,
இலங்கைப் பெண்களின் இன்றைய நிலை
தசாப்த காலமான போர் மற்றும் திட்டமிடப்பட்ட அசாதாரணங்கள்,காலனித்துவ பொருளாதார கோட்பாடுகளால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் கிராமிய பெண்கள் மற்றும் பெருந்தோட்ட பெண்கள் முக்கியத்தும் பெறுகின்றனர்.ஆனால் அவர்கள் பிரச்சினைகளுக்கு சிறந்த முறையில் முகம் கொடுக்கின்றனர்.
குடும்பம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம்,முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தலைமைத்துவம் வகிக்கின்றனர்.அது மட்டுமல்ல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் வலுவாக ஒன்றிணைந்து முகம் கொடுக்கின்றனர்.

அரசியல் நோக்கத்தில் தீர்மானம் எடுக்கும் போது பெண்களை புறக்கணித்தல் சாதாரண விடயமாகியுள்ளது.அதற்கு காரணம் பாலின வேறுபாடாகும்.
பெண்கள் அரசியலில் தலைமை வகிக்கும் போது முன்னெடுக்கப்படும் அவதூறுகளால் சமூகத்தில் மதிப்புள்ள மற்றும் புலமையான பெண்கள் அரசியலுக்கு வர மறுக்கின்றனர் என குறிப்பிட்டிருந்தார்.
புருஷனா இருக்குறது முக்கியம் இல்ல.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தின் ப்ரோமோ Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan