அநுர அரசுக்குள் சீனா தலையீடு - பிரதமர் பதவியில் தொடரும் சர்ச்சை
இலங்கையின் அரசியல் தலையீடுகளின் பின்னணியில் சீனா செயற்பட்டு வருவதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சமகாலத்தில் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள அநுர அரசாங்கத்திற்குள் மாற்றங்களை மேற்கொள்ள சீனா அழுத்தம் கொடுப்பதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
புதிய கல்வி சீர்திருத்தம்
பிரதமரனால் முன்னெடுக்கப்பட்ட புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கையில் எழுந்த தவறு காரணமாக இந்த சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்களும் தூண்டி விட்டு நிலைமையை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்து வரும் வாரங்களில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் பதவியில் சர்ச்சை
பிரதமர் பதவியில் இருந்து ஹரிணி அமரசூரியவை நீக்கிவிட்டு, அமைச்சர் பிமல் ரட்நாயக்கவை அந்தப் பதவிக்கு நியமிக்க கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

பிமல் ரத்நாயக்க சமீபத்தில் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சென்று இலங்கை திரும்பியுள்ளார்.
அதற்கமைய, பிரதமர் பதவிக்கு அவர் பரிந்துரைத்ததன் பின்னணியில் சீனாவும் இருப்பதாக உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அநுர அரசாங்கம் பொறுப்பேற்ற போது, பிரதமராக பிமல் ரட்நாயக்க செயற்பட விரும்புவதாகவும், ஹரணிக்கு வழங்கியமை தொடர்பில் அவர் விசனம் வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.