இனவாதத்தை தூண்டும் தோல்வி கண்ட குழுக்கள்: பிரதமர் விமர்சனம்
தோல்வி கண்ட சில குழுக்கள் நாட்டில் மீண்டும் இனவாதத்தைத் தூண்டுவதற்கு முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (03.12.2024) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டு மக்கள் இனவாதம் மற்றும் சந்தர்ப்பவாத அரசியலை நிராகரித்துள்ளனர். தேர்தல் முடிவுகளும் அதனையே வெளிப்படுத்தின.
ஒன்றிணைந்து செயற்படுவோம்
இந்நிலையில், தோல்வியடைந்த அரசியல் குழுக்கள் மீண்டும் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலைக் கொண்டு செல்ல இனவாதத்தைத் தூண்டி, இனவாதக் கருத்துக்களைப் பரப்பி மக்களைப் பிளவுபடுத்த முற்படுகின்றன.
ஆனால், இனவாதம் மீண்டும் தலைத்தூக்க அரசு இடமளிக்கப் போவதில்லை. இத்தகைய செயற்பாட்டை ஒடுக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
எதிர்க்கட்சியிலும் இனவாதத்தை புறக்கணிக்கும் எதிர்க்கும் பலர் உள்ளனர். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
மக்கள் எம்மிடம் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதனால் வரலாற்றின் பாடங்களை உணர்ந்து சிறந்த நாட்டை உருவாக்க ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுகின்றோம். அதனைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
