ஹரின் - மனுஷவின் கட்சி உறுப்புரிமை நீக்கம்
புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் நாட்டுக்கான நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிப்பதுடன், புதிய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஏற்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தி அண்மையில் தீர்மானித்திருந்தது.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.
இந்நிலையில், கட்சி தீர்மானத்தை மீறியமைக்காக அவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
| ஹரின் மற்றும் மனுஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை! ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை! |

தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri