காணி ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் ஹரின்
காணி ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
விசாரணை தொடர்பான ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்களை வழங்குவதற்கு ஹரின் பெர்னாண்டோ சுமார் மூன்று மணி நேரம் செலவிட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஹரின் பெர்னாண்டோ, “நான் காணி அமைச்சராக இருப்பதற்கு முன்பு தொடங்கப்பட்ட காணி ஒப்பந்தம் குறித்த எனக்கு தெரிந்த தகவல்களை அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.
விசாரணைக்குரிய காணி ஒப்பந்தம்
அதைப் பற்றி எனக்குத் தெரிந்ததை நான் அவர்களிடம் சொன்னேன். இது 2021 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தீர்மானமாகும்” எனக் கூறியுள்ளார்.
விசாரணைக்குரிய காணி ஒப்பந்தம் முன்னாள் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் பதவி காலத்தில் உருவானது என நம்பப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



