ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் (IPL) தொடரின் 9 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இந்திய மதிப்பில் 12 இலட்சம்
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
Hardik Pandya has been fined INR 12 lac after Mumbai Indians maintained a slow over rate during the match against Gujarat Titans. #IPL2025 pic.twitter.com/O004vN2A9I
— Cricbuzz (@cricbuzz) March 30, 2025
197 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
இந்தநிலையில் குறித்த போட்டியின் போது பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியாவிற்கு (Hardik Pandya) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஹர்திக் பாண்டியாவிற்கு போட்டிக்கட்டணத்திலிருந்து இந்திய மதிப்பில் 12 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |