ஹரக் கட்டாவின் பணத்தில் சொகுசு வாகனங்கள் - வீடுகள் கொள்வனவு: திடுக்கிடும் தகவல்கள்

Sri Lanka Police SJB
By Kamal Jun 28, 2026 03:20 AM GMT
Report

 போதைப்பொருள் கடத்தல்காரரான நந்துன் சிந்தக்க எனப்படும் 'ஹரக் கட்டா'வை சிறையிலிருந்து விடுவிப்பதாகக் கூறி, அவரது மனைவியிடம் பெறப்பட்ட பல கோடி ரூபாய் லஞ்சப் பணத்தில் சந்தேகநபர்கள் சொகுசு வாகனங்கள் மற்றும் வீடுகளைக் கொள்வனவு செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச, சரித் அபேசிங்க மற்றும் அருண ஸ்ரீ சதுரங்க வருஷஹன்னதி ஆகியோரே இவ்வாறு லஞ்சப் பணத்தை தமது தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்

ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்

நிர்மாணித்து வரும் சொகுசு வீடு

சரித் அபேசிங்க என்பவர் ஹரக் கட்டாவின் மனைவியிடமிருந்து பெற்ற லஞ்சப் பணத்தில் ரேஞ்ச் ரோவர் ஃப்ரீலாண்டர் ரக சொகுசு ஜீப் வண்டியொன்றை கொள்வனவு செய்துள்ளதுடன், கஹதுடுவ பிரதேசத்தில் அதிநவீன சொகுசு வீடொன்றையும் நிர்மாணித்து வருவதாக நீதிமன்றில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஹரக் கட்டாவின் பணத்தில் சொகுசு வாகனங்கள் - வீடுகள் கொள்வனவு: திடுக்கிடும் தகவல்கள் | Haraka Kataas Wife Revels All

அதேவேளை, வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான அருண ஸ்ரீ சதுரங்க வருஷஹன்னதி என்பவர், இந்த லஞ்சப் பணத்தைப் பயன்படுத்தி பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ரக கருப்பு நிற சொகுசு கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

விசாரண அதிகாரிகள் சோதனையிட்ட போது, அந்த கார் அவரது வீட்டில் வைக்கப்பட்டு பழுதுபார்க்கும் பணியில் இருந்ததாக இலஞ்ச  ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தற்போது வைத்துள்ள இந்த அதிசொகுசு சொத்துக்கள் அனைத்தும், டுபாயில் வைத்து ஹரக் கட்டாவின் மனைவியான மஹேஷிகா மதுவந்தி என்பவரால் வழங்கப்பட்ட 12 கோடி ரூபாவிற்கும் அதிக லஞ்சப் பணத்தில் கொளவ்னவு செய்யப்பட்டவை என ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

தடுப்புக்காவல் உத்தரவு

தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி, ஹரக் கட்டாவை மெகசின் சிறைச்சாலைக்கு மாற்றுவதாக சந்தேகநபர்கள் மூவரும் உறுதியளித்திருந்தனர்.

எனினும், அவ்வாறு செய்யாமல் அவரை காலி பூஸ்ஸ சிறைச்சாலையிலேயே தொடர்ந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால், தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட மாட்டாது என்பதை உணர்ந்த அவரது மனைவி மஹேஷிகா மதுவந்தி, தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு மீண்டும் மீண்டும் கேட்டுள்ளார்.

ஹரக் கட்டாவின் பணத்தில் சொகுசு வாகனங்கள் - வீடுகள் கொள்வனவு: திடுக்கிடும் தகவல்கள் | Haraka Kataas Wife Revels All   

எனினும், சந்தேகநபர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி அந்தப் பணத்தைத் திருப்பித் தருவதைத் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளனர். பணத்தைத் திருப்பித் தர மறுத்த சரித் அபேசிங்க, ஹரக் கட்டாவின் மனைவியிடம், "நீங்கள் தந்த லஞ்சப் பணத்தில் ஒரு பகுதி ரகித ராஜபக்சவிடம் கொடுக்கப்பட்டுள்ளதால், அதை அவரிடமிருந்து திரும்பப் பெற முடியாது" எனக் கூறியுள்ளார்.

எனினும், ரகிதவிடம் கொடுத்த பணத்திலிருந்து 200 இலட்சம் ரூபாவையாவது எப்படியாவது திரும்பப் பெற முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சரித் அபேசிங்க 'ஹெர்பி' எனப்படும் தரகரின் நண்பர் ஒருவர் ஊடாக 200 இலட்சம் ரூபாவை ஹரக் கட்டாவின் மனைவி மஹேஷிகா மதுவந்தியிடம் திருப்பி ஒப்படைத்துள்ளார்.

வெளிநாட்டுப்பயண ஆவணங்கள்

ஏனைய தொகையை சந்தேகநபர்கள் தமது தனிப்பட்ட தேவைகளுக்காகத் தொடர்ந்து வைத்துள்ளனர் என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

ஹரக் கட்டாவின் பணத்தில் சொகுசு வாகனங்கள் - வீடுகள் கொள்வனவு: திடுக்கிடும் தகவல்கள் | Haraka Kataas Wife Revels All

இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடமிருந்து சரித் அபேசிங்க, ரகித ராஜபக்ச மற்றும் அருண வருஷஹன்னதி ஆகியோரின் வெளிநாட்டுப் பயண ஆவணங்கள் பெறப்பட்டு சோதிக்கப்பட்டன.

அதன்படி, இவர்கள் மூவரும் 2023.03.25 அன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து டுபாய் நோக்கிப் பயணித்து, பின்னர் 2023.03.29 அன்று மீண்டும் இலங்கைக்குத் திரும்பியுள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்

ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்

இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US