பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
பல்கலைக்கழக மாணவர்களின் மஹாபொல புலமைப்பரிசிலுக்கான நிலுவையிலுள்ள கொடுப்பனவுகள் அடுத்து வரும் சில வாரங்களுக்குள் வழங்கப்படும் என்று மஹாபொல புலமைப்பரிசில் நிதியம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழத்திற்குள் பிரவேசிக்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதன் மூலம் தமது கல்வி நடவடிக்கைகளை பூரணப்படுத்த வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவுகளில் ஏதேனும் குறைவு இருப்பின் அதன் நிலுவை தொகையை உரிய பல்கலைக்கழகங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் நிதியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த வேண்டுகோளுக்கு கொழும்பு பல்கலைக்கழகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதுவிடயம் குறித்து மஹாபொல புலமைப்பரிசில் நிதியம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியன கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. உரிய மாணவர்களுக்கு இதுவிடயம் குறித்து அறிவுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
