சுபகிருது சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மலர்ந்திருக்கும் தமிழ் சிங்கள "சுபகிருது" புதுவருடம் சகல மக்களுக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், சுபீட்சத்தையும், மற்றும் செளபாக்கியங்களையும் வழங்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு வழியேற்படுத்த எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்து நல்வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களின் துன்ப துயரங்கள் நீங்கி அனைவரும் சந்தோசமாக இருக்க அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என யாழ்.மாவட்டம் அரசாங்க அதிபர் க.மகேசன் தமது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
இதேவேளை,மலரும் "சுபகிருது" வருட தமிழ் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என வடமாகாணம் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தமது வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சித்திரையே வா நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா” என்று சொல்லும் மரபு காணப்படுகிறது இதன்மூலம் சித்திரையின் சிறப்பினை காணலாம். நாட்டில் ஏற்பட்ட கொவிட் தாக்கம் அதன் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அனைவருடைய வாழ்க்கையிலும் பல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையில் இருந்து நாட்டை மீட்பது அனைவருடைய கடமையாகும். ஆகவே மலரும் சித்திரை புத்தாண்டில் இருந்து மக்களுடைய அனைத்து துன்பங்களும் நீங்கி நாடு அபிவிருத்தியை நோக்கி முன்னேற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக என்றும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
