ஹன்வெல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவி கடத்தல்: ஐந்து இளைஞர்களை கண்டுபிடிக்க விசாரணை
ஹன்வெல்ல, அம்குகம பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச்சென்று தகாத முறைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஐந்து இளைஞர்களை கண்டுபிடிப்பதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவி தனது காதலனைச் சந்தித்து விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் மாணவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சுடுகாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று இன்று (21) தகாத முறைக்கு உட்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து மாணவி வழங்கிய முறைப்பாட்டிற்கமைய, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து மாணவி கொஸ்கம பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவி தனது சிறிய தாயுடன் டன்சலுக்கு செல்வதாகவும் பின்னர் தனது காதலனை சந்திக்க புத்தக கடைக்கு செல்வதாகவும் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 14 மணி நேரம் முன்

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam
