கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான முக்கிய அதிகாரி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரை சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பெருந்தொகை தங்கத்தை கடத்தும் முயற்சில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சுமார் 48 மில்லியன் ரூபா பெறுமதியான 18 தங்க பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தங்க பிஸ்கட்
விமான நிலையத்தில் 15 வருடங்களாக பணியாற்றும் 40 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாத்தறை, ஹக்மன பிரதேசத்தை சேர்ந்தவர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர் வருகை முனையத்தின் கழிப்பறையில் வைத்து பயணி ஒருவரிடம் இருந்து தங்க பிஸ்கட்களை பெற்றுள்ளார். இதற்காக ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 14 மணி நேரம் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
