செந்தில் தொண்டமானின் முயற்சியின் ஊடாக பி.சி.ஆர் இயந்திரமொன்று இலங்கைக்கு கையளிப்பு
இந்தியாவின் நிரு டயமன்ட் கடர்ஸ் நிறுவனத்தினால் இலங்கைக்கு 65 லட்சம் ரூபாய் பெறுமதியான பி.சி.ஆர் இயந்திரமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிரு டயமன்ட் கடர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சஞ்ஜய பெட்டினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த இயந்திரம் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ள பி.சி.ஆர் இயந்திரம் தியத்தலாவை வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும்,பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் முயற்சியின் ஊடாக இந்த பி.சி.ஆர் இயந்திரம் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கு அமைய, தியத்தலாவை வைத்தியசாலைக்கு இந்த இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது .
கோவிட்-19 தடுப்புக்காக தனியார் துறை வழங்கும் பங்களிப்புக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதம அலுவலகத்தின் பிரதானி யோஷித்த ராஜபக்ஷ, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.




உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 16 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
