புதுக்குடியிருப்பில் இராணுவத்தினர் வசம் இருந்த 11 ஏக்கர் மக்கள் காணி விடுவிப்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 7ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள இதுவரை இராணுவப் பயன்பாட்டில் உள்ள 11 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய ஆவணத்தினை முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிலப்பிட்டிய உத்தியோகப்பூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளார்.
2009க்கு முன்னர் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை அமைந்திருந்த காணி உள்ளடங்கலாகப் புதுக்குடியிருப்பு நகரத்துக்கு அண்மையாகவுள்ள மக்களின் காணிகளே இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளன.
தமக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு கோரி 2017ஆம் ஆண்டு மாசி மாதம் காணி உரிமையாளர்களால் குறித்த இராணுவ முகாமுக்கு முன்பாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதன் பயனாக ஏழு ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக காணியில் இராணுவம் தொடர்ச்சியாக நிலை கொண்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே தற்போது குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
682ஆவது படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட
அரசாங்க அதிபர் க.விமலநாதன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்
எஸ்.ஜெயக்காந் மற்றும் காணிப்பகுதி அதிகாரிகள், கிராம சேவையாளர் மற்றும் 68 ஆவது
படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.








மிகப்பெரிய வரவேற்பு பெறும் காந்தாரா Chapter 1... முதல்நாள் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா? Cineulagam

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
