மயானத்துக்குள் சிக்கிய கைத்துப்பாக்கி : பொலிஸார் தீவிர விசாரணை
கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4 தோட்டாக்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று விசேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸார் தீவிர விசாரணை
இதன்போது, மயானப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, 4 தோட்டாக்கள் ஆகியன கண்டெடுக்கப்பட்டன.

ஏதேனும் ஒரு பாரிய குற்றச் செயலை அல்லது படுகொலையை அரங்கேற்றுவதற்காக இந்த ஆயுதம் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கட்டானை பொலிஸாரும், நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த ஆயுதத்தை அங்கு கொண்டு வந்து மறைத்து வைத்த நபர்களைக் கண்டறிய விசேட தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகம் இந்தியாவையும் ஆக்கிரமிக்கும் அபாயம் - நாடு முழுவதும் பறந்த உத்தரவு
தீவிரமடையும் நிலைமை: டுபாய் - அபுதாபியில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை - வெளியானது அறிவிப்பு