உலக சந்தையில் எண்ணெய் விலை உச்சம் தொடும் அபாயம்:எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம்!
மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், குறிப்பாக உலகளாவிய எண்ணெய் வழங்கலில் 20 சதவீத பங்கைக் கொண்ட ஆர்முஸ் ஜல சந்தி (Strait of Hormuz) வழியாக நடைபெறும் விநியோக வழிகள் பாதிக்கப்படுகிறதா என கண்காணித்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் எண்ணெய் விலைகள் உச்சத்தை தொடும் என்று பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இன்று நடந்த முதல் வர்த்தக நாளில் கச்சா எண்ணெய் விலை 8 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்து பல மாதங்களிலேயே இல்லாத உச்ச நிலையை எட்டியது.
பயணத்தை நிறுத்தியுள்ள கப்பல் நிறுவனங்கள்
இந்த தாக்குதல்களில் பல எண்ணெய் கப்பல்கள் சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக, பல கப்பல் உரிமையாளர்கள், பாரிய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஆர்முஸ் ஜல சந்தி (Strait of Hormuz) வழியாக கச்சா எண்ணெய், எரிபொருள் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) கொண்டு செலவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

சிட்டி (Citi) வங்கி பகுப்பாய்வாளர்கள், அடுத்த குறைந்தது ஒரு வாரத்திற்கு பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 80 முதல் 90 அமெரிக்க டொலர் வரை வர்த்தகம் செய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.
பதற்றம் குறைந்தால், விலை மீண்டும் 70 டொலர் வரை குறையக்கூடும் என்றும் எதிர்பார்க்கின்றனர். வுட் மேக்கென்சி (Wood Mackenzie) நிறுவனம்,ஆர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து விரைவில் மீளத் தொடங்கவில்லை என்றால், எண்ணெய் விலை ஒரு பெரலுக்கு 100 டொலரைத் தாண்டக்கூடும் என தெரிவித்துள்ளது.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri