திருக்கோவில் வம்மியடி ஆற்றில் 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் பாகங்கள் மீட்பு
அம்பாறை - திருக்கோயில் பொலிஸ் பிரிவிலுள்ள வம்மியடி ஆற்று பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உதிரிப் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோதனை முன்னெடுப்பு
அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் பொலிஸாருடன் இணைந்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வம்மியடி ஆற்றுப் பகுதியில் இருக்கும் மரம் ஒன்றின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் பாகங்கள் சிலவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோயில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த பிரதேசதம் கடந்த காலத்தில் jமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளதுடன், அங்கு அவர்களின் முகாம் இருந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri